யார் கொலையாளிகள்: நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்
1989 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் பரஸ்பரம் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் நேற்று நாடாளுமன்றத்தில் தீவிரமான வாத விவாதங்கள் இடம்பெற்றன.
முன்னாள் அமைச்சரான தனது தந்தை,1989 பொதுத் தேர்தலுக்கு பிரசாரம் செய்தபோது எட்டு பேரைக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிரத்ன பொய்யான கூற்றை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிரத்ன குற்றம் சாட்டியபோது வாக்குவாதம் ஆரம்பமானது.
"எனது தந்தை யாரையும் கொலை செய்யவில்லை, ஏனெனில் அவருக்குப் பைத்தியம் பிடித்ததில்லை" என்று ரோஹிணி கவிரத்ன கூறினார்.
தனிப்பட்ட விடயங்கள்
பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர, 1989ஆம் ஆண்டு மாத்தளையில் 140 இளைஞர்கள் படுகொலைகளில் யார் ஈடுபட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது விரைவில் வெளியிடப்படும், என்று அவர் கூறினார்.
இந்த நேரத்தில் குறுக்கிட்ட அரசாங்க தலைமை அமைப்பாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, ரோஹிணி கவிரத்ன அல்லது வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தனிப்பட்ட விடயங்களை எழுப்புவதன் மூலம் நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணாக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.
ஒரு கட்சியின் தலைவர் ஒரு முக்கியமான விடயத்தில் நிலையியல் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பலாம். அதேநேரம், எந்த ஒரு உறுப்பினரும், சபாநாயகரைச் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தைப் பற்றி அவருக்கு விளக்கிய பின்னர், அமர்வுகளின் போது அந்த விடயத்தை எழுப்பலாம். இருப்பினும், எந்த உறுப்பினரும், சபையில் தனிப்பட்ட விடயத்தை எழுப்ப முடியாது என்று நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan

22 வயதில்.., பயிற்சியில்லாமல் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri
