இனி மக்கள் புரட்சியை தடுக்க முடியாது! இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்க அறிவிப்பு (Video)
நாட்டில் மக்கள் புரட்சியை தடுக்க முடியாது என்று எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் மக்கள் புரட்சி வெடித்துள்ளதாகவும், மக்கள் புரட்சியை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெட்ரோலுக்கு வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. எரிவாயுக்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கு என்று அனைத்திற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் ஊரடங்கினை பிறப்பிப்பதாலோ அல்லது அவரச காலச் சட்டத்தை கொண்டு வருவதாலோ அன்றி சமூக வலைத்தளங்களை முடக்குவதாலோ மக்கள் புரட்சியை தடுக்க முடியாது. மக்கள் தற்போது இந்த ஆட்சிக்கு எதிராக வெளியே வந்துவிட்டார்.
நாடாளுமன்றம் இணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறையை மாற்றியமைக்கவேண்டும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிகொடுக்கவேண்டும்.
தாம் சந்தர்ப்பவாத அரசியலில் அமைச்சுப் பொறுப்புக்களை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்காது. தாம் அரசாங்கம் அமைப்பதாக இருந்தால், பொதுமக்களின் ஆசிர்வாதத்துடனேயே அரசாங்கம் அமைக்கப்படும். இதேவேளை இன்று பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்த சில தினங்களில் எதிர்பாராத விதமாக நாட்டில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
மக்களின் போராட்டங்களால் நிலைமை கைமீறிச் சென்றதை அடுத்து, அமைச்சரவை கலைப்பு, உயர்மட்ட பதவி விலகல் என அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
