அடுத்த வாரம் செவ்வாய் முதல் வெள்ளி வரை நாடாளுமன்ற அமர்வுகள் :வெளியானது நிகழ்ச்சி நிரல்
நாடாளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
8ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2023ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5 வரை பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதையடுத்து, பிற்பகல் 5 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதன் பின்னர் பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.
சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதம்
ஆகஸ்ட் 10 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.00 வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.
அதற்கமைய, உள்ளூராட்சி நிறுவங்களால் கழிவகற்றப்படுத்தல் (சமிந்த விஜேசிறி), மன்னன் இராவணன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் (புத்திக பத்திரண), நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும் நிறுவனங்களை கடுமையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் (கோகிலா குணவர்தன), பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய முறையினை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை வெளியிடல் (சட்டத்தரணி சாகர காரியவசம்), இலங்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை இடமாற்றம் வழங்கப்படுதல் (பேராசிரியர் ரஞ்சித் பண்டார) மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நலனோம்புகை வசதிகளை வழங்குதல் ( சமிந்த விஜேசிறி) ஆகிய தனியார் உறுப்பினர் பிரேரணைகள் அன்றைய தினம் பிரேரிக்கப்படவுள்ளன.
அதையடுத்து, பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் இது குறித்த கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
