ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டி! நாடாளுமன்றில் சற்று முன் அறிவிப்பு (video)
ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தினார்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்கவை, விஜித ஹேரத் முன்மொழிய ஹரினி அமரசூரிய அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, அதனை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக் கொண்டதையடுத்து சபை அமர்வுகள் நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை காலை 10 மணிக்கு இடம்பெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க சபையில் அறிவித்தார்.
முதலாம் இணைப்பு
(10.05 a.m.)
புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்று வருகிறது.
இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு காலை பத்து மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
அத்துடன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.