இஸ்லாம் மதத்தைக் காட்டிக் கொடுத்த முஸம்மில்! எதிர் கட்சி கடும் சீற்றம் (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் அரசியல் விபச்சாரம் செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார், நேற்று முன்தினம் வர்த்தகர் திருநடேசனை சந்தித்ததாக நேற்று தெரிவித்த மொஹமட் முஸம்மில் இதன் மூலம் அரசியல் நாடகம் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் இது தொடர்பில் இன்று கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் நனின் பண்டார, முஸம்மில் தமது அரசியல் விபச்சாரத்துக்காக 87 வயதான நடக்கமுடியாமல் இருக்கும் தாயாரான ஹேமா பிரேமதாசவின் மீது குற்றம் சுமத்தியமை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் முஸம்மில், தமது மதத்தையும் காட்டிக்கொடுத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் நாட்டில் மக்கள் கேட்கும் கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தினால் பதில் வழங்கமுடியாமல் போகுமானால், தாம் நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து போராட்ட பூமிக்கு செல்லப்போவதாக நளின் பண்டார தெரிவித்தார்.



