நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்று.... (Parliament Live)
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பு இன்று மாலை 5.30க்கு இடம்பெறும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம் நேற்றைய தினம் சபையில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
