சிறப்புரிமை தொடர்பான பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற உறுப்பினர்களதும் நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
32 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது
பிரேரணை தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, பிரேணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய, 32 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் கூட்டணி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam