20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சி தாவல்: வெளியான தகவல்
புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சி தாவவுள்ளனர் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.
எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளது எனவும், ஆளுங்கட்சிப் பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் ரணிலுடன் சங்கமிக்கவுள்ளனர்.

அதேபோல் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஜி.எல்.
பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, உதயன கிரிந்திகொட, வசந்த
யாப்பா பண்டார, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ச, உபுல் கலப்பட்டி, சரத்
குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri