போராட்டக் குழுவை சேர்ந்த 4 பேருக்கு எம்.பி. பதவி..!
காலிமுகத்திடல் போராட்டக் குழுவை சேர்ந்த நால்வரை எம்.பிக்களாக நியமிப்பதற்கு அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பதவி விலகி போராட்டக் குழுவை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்த ஆசனத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சில குழுவினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
