“திருகோணமலையில் 75 எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்”
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் உள்ள எரிபொருளை களஞ்சியப்படுத்தும் 75 எண்ணெய் தாங்கிகள் உட்பட முழு சூழலையும் இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்சவர்தன் நேற்று திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட சென்றிருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த அரசாங்கம் எந்த நேரத்தில் அவசரகாலச் சட்டம், ஊரடங்குச் சட்டம் ஆகியவற்றை அமுல்படுத்தி இலங்கையை யாருக்காவது விற்று விடுவார்களே என தெரியாத நிலைமையில் நாங்கள் இருக்கின்றோம்.
மதியம் 12 மணிக்கு அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட குழுவினர் திருகோணமலைக்கு சென்றதை நாம் பார்த்தோம்.
யாருக்கும் தெரியாமல் போகின்றனர். திருகோணமலை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை சேர்ந்த அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
75 எண்ணெய் தாங்கிகள் உட்பட முழு துறைமுகத்தையும் விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர் எனவும் ஹெக்டர் ஹப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி....
"இந்தியா வசமாகும் திருகோணமலையின் எண்ணெய் கிணறுகள்"

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
