நாடாளுமன்றம் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மே மாதத்தின் முதலாம் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம், 09ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
வெளியான வர்த்தமானி அறிவித்தல்
இதன் போது 08ம் திகதி வாய்மூல வினாக்களுக்கான விடையளித்தல் தவிர அன்றைய தினம் மாலை அமர்வில் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் வரிவிதித்தல் தொடர்பில் அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்படும்.
09ம் திகதி காலை அமர்வில் முதலில் வாய்மூல வினாக்களுக்கு விடையளிக்கப்படும். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அரச தலைவர்கள், அவர்களின் பாரியார்கள் அனுபவிக்கும் சலுகைகளை குறைத்தல் தொடர்பான பிரேரணை, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியில் அரசாங்கத்தின் வகிபாகத்தை அதிகரித்தல் தொடர்பான பிரேரணை, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரியின் கணக்காய்வாளர் நாயகம் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பான பிரேரணை என்பன விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைக்கவுள்ள இலங்கையில் சகல குடும்பங்களுக்கும் சொந்த வீடு வழங்கல், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைக்கும் பொதுப் போக்குவரத்துக்கு தரங்களுக்கு அமைவான பேருந்துகளை மட்டும் இறக்குமதி செய்வதற்கான பிரேரணை என்பனவும் அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
