வரவு செலவுத் திட்ட விவாதங்களில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு பங்கேற்க வேண்டும்
வரவு செலவுத் திட்ட விவாதங்களில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெறும் போது அவையில் குறைந்தபட்சம் 80 ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் யார் யார் அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றிய திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த உறுப்பினர்கள் எந்தெந்த நாட்களில் அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை, ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அமர்வுகளில் பங்கேற்பதனை உறுதி செய்யவும்,
அவர்கள் தொகுதி மற்றும் அமைச்சுப் பணிகளை மேற்கொள்ளவும் கூடிய வகையிலான நேர முகாமைத்துவத்தை மேற்கொள்ள வழியமைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 11 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam
சர்ச்சைக்கு மத்தியிலும் CM விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித் தயாருக்கு அஞ்சலி! படுவைரலாகும் வீடியோ Manithan