மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்:கணபதிப்பிள்ளை மோகன் கண்டனம்

Batticaloa Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Sri Lanka Politician Sri Lanka
By Bavan Nov 23, 2022 08:50 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் விவாதிக்காமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து சின்னப்பிள்ளைதனமாக சண்டையிட்டது மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ளது என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

செங்கலடியிலுள்ள பிறிதியன் திரையரங்கு மண்டபத்தில் நேற்று (22.11.2022) விசேட ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்:கணபதிப்பிள்ளை மோகன் கண்டனம் | Parliament Chandrakandan Shanakyan Ganavathiplai

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் ஆகிய இருவரும் 21ம் 22ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஆற்றி உரை, நடந்து கொண்டவிதம் மட்டக்களப்பு மாவட்ட மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மக்களை தலைகுனிய வைத்துள்ளது.

வெற்றிக்கு நாங்கள் பாடுபட்டவர்கள்

இவர்களுடைய வெற்றிக்கு கடந்த பொதுதேர்தலில் தமிழ் உணர்வாளர் அமைப்பு ஆகிய நாங்கள் மிகவும் பாடுபட்டோம். 

மாவட்டத்துக்கு 5 தமிழ் பிரதிநிதித்துவம் வரவேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு வாக்களிக்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம் அந்த வகையில் இவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபட்டவர்கள். 

மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்:கணபதிப்பிள்ளை மோகன் கண்டனம் | Parliament Chandrakandan Shanakyan Ganavathiplai

அந்தவகையில் உங்களது செயற்பாட்டிற்கு மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவே தமிழர்களாகிய நாங்கள் ஒருமித்த பாதையிலே பயணிக்கவேண்டிய காலத்தின் கட்டாய தேவை இருக்கின்றது அதனைவிடுத்து இவ்வாறு சின்னப்பிள்ளைதனமாக நாடாளுமன்றத்தில் சண்டையிடுவது மாவட்ட மக்களை தலைகுனியவைத்துள்ளது. 

அரச காணிகள் 

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் 44 ஏக்கரை குத்தகைக்கு பெற்றிருக்கின்றார். இதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? அரச காணியை யாரும் குத்தகைக்கு பெறலாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கலாம், பாமர மக்களாக இருக்கலாம் அதில் எந்தவிதமான பிரச்சினைக்கும் இடமில்லை.

இதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கனடாவிற்கு ஆளை அனுப்பினார் கனடாவுக்கு சாணக்கியன் ஆளை அனுப்பினால் பிள்ளையானுக்கு என்னகுறை வந்துவிட்டது.  எந்த பிரச்சினையும் இல்லை இதனை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது பெரிய வெக்ககேடானது. 

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏராளமான காணிகள் பல தரப்பாலும் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒருமித்து யாராவது தமிழர்கள் இந்த காணிகளை தக்கவைத்து கொள்ளவேண்டிய காலத்தின் கட்டாய தேவை இருக்கின்றது என்பதை சகலரும் உணர்ந்து கொள்ளுங்கள். 

மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்:கணபதிப்பிள்ளை மோகன் கண்டனம் | Parliament Chandrakandan Shanakyan Ganavathiplai

 எனவே அரச நிலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழர்களுக்கும் இருக்கின்றது இதனையெல்லாம் பெரிய விடயமாக தூக்கிப்பிடிக்க வேண்டாம். 

சாணக்கியன் வெளிநாட்டுக்கு ஆளை அனுப்பியிருந்தால் வேறு ஏதும் செய்திருந்தால் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டிய விடயம் இல்லை இதை உங்கள் வீட்டுகளின் வாசலில் மேடை அமைத்து விவாதித்துக் கொள்ளுங்கள். 

தீர்க்கப்படாத விடயங்கள் 

மாவட்டத்தில் எங்களுடைய தீர்க்கப்படாத, திட்டமிடவேண்டிய விடயங்கள் அதிகளவில் இருக்கின்றது இவையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசாமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து இந்த மாவட்ட மக்களின் மரியாதையை இழந்திருக்கின்றீர்கள். 

பல்கலைக்கழக உபவேந்தவர் இங்கு தான் கொலை நடந்தது. வேற்று கிரகவாசிகள் வந்து கொலை செய்யவில்லை இதனை அனைவரும் அறிந்த விடயம் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை செய்யவேண்டும் என்றார். 

அவ்வாறான தேவையிருந்தால் அதை செய்யாது உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும் அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் தம்பியார் ஆள்கடத்துவதாக ஒரு செய்தியை நான் வாசித்தேன்.

இந்த நாட்டில் புலனாய்வுதுறை குற்ற விசாரணைப்பிரிவு என பல பாதுகாப்பு பிரிவுகள் இருக்கின்றது அதனை விசாரித்து உரியவர்கள் தவறு செய்திருந்தால் தண்டிக்க வேண்டியது கட்டாயம்.

மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்:கணபதிப்பிள்ளை மோகன் கண்டனம் | Parliament Chandrakandan Shanakyan Ganavathiplai

எனவே இனிவரும் காலங்களில் இந்த அரசியல் தலைவர்கள் ஒருமித்த பாதையில் ஒரு திட்டமிடலை வகுத்து எங்கள் மாவட்டத்துக்கு என்ன தேவை இருக்கின்றது நாங்கள் இதை எப்படிச் செய்யப் போகின்றோம் என்ற ஒருமித்த வேலைத்திட்டத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு ஒருமித்து வாழவேண்டும் என்ற கோட்பாட்டை தமிழ் உணர்வாளர் அமைப்பு முன்வைக்கின்றோம். 

அதேவேளை தமிழரே தமிழராய்யுவோம் அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்த பாதையில் பயணம் செய்யவேண்டிய காலத்தின் கட்டாயம் இருக்கின்றது இதனை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்படவேண்டும். 

 இந்த மாதிரி சின்னப்பிள்ளைதனமாக சண்டைகளை நாடாளுமன்றம் கொண்டு சென்று மாவட்ட மக்களை அசிங்கப்படுத்தாமல் மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US