உலக வங்கியின் நிதி பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைப்பு(Photo)
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டவரைபில், உலக வங்கியின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட குளம் என்பன இன்று(17) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பூங்காக்கள்

இதன்படி யாழ்ப்பாண பாசையூர் பூங்கா, இராசாவின் தோட்ட வீதி பூங்கா, மடத்தடி பூங்கா என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்ஜோன் பொஸ்கோ அருகிலுள்ள பிள்ளையார் குளமும் இதன்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வு

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் டி.பி.எஸ்.கே.திசாநாயக்க, யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு மிகவும் எளிமையான முறையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam