இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்துள்ள பாரிஸ் கிளப்
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளின் முன்னேற்றத்தையடுத்து பாரிஸ் கிளப் இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்துள்ளது.
பாரிஸ் கிளப் அங்கத்தவர்கள் குழு
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றே பாரிஸ் கிளப் அங்கத்தவர்கள் குழுமமும் வளர்ச்சியடையும் நாடுகளுக்கு கடன் தொகைகளை வழங்கும் ஒரு கட்டமைப்பாகும்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளையடுத்து தற்போது பாரிஸ் கிளப் அங்கத்தவர்கள் குழுமமும் காப்புறுதி நிதிச் சேவைகள், நிதி உத்தரவாதம் என்பவற்றை வழங்க முன்வந்துள்ளது.

இறக்குமதி வாய்ப்புக்கள்
அதன் மூலம் இனிவரும் காலங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான நிதி உத்தரவாதத்தை பாரிஸ் கிளப் அங்கத்தவர்கள் குழுமத்தின் நிதி உத்தரவாதத்தை துரிதமாகப் பெற்று இலகுவாக இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அத்துடன் இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள ஏனைய தரப்பினருடன் நடைபெற வேண்டிய இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக செயற்படவும் பாரிஸ் கிளப் அங்கத்தவர் குழுமம் விருப்பம் வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan