இழுபறிக்கு மத்தியில் புதிய சட்ட மா அதிபராக பாரிந்த ரணசிங்க நியமனம்
சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை (Parindha Ranasinghe) நியமிப்பதற்கு அரசமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசமைப்புப் பேரவை, இன்று (11.07.2024) கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பரிந்துரை
முன்னதாக சட்டமா அதிபர் பதவியிலிருந்து சஞ்சய் இராஜரத்தினம் (Sanjay Rajarathnam) ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது சேவையை ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Widkremesinghe) பரிந்துரைத்திருந்தார்.
இருப்பினும், ஜனாதிபதியின் பரிந்துரையை இரண்டு தடவைகளும் அரசியலமைப்பு பேரவை அங்கீகரிக்கவில்லை.
மேலும், கடந்த 26ஆம் திகதி அரசியலமைப்பு பேரவையினால் சஞ்சய் இராஜரத்தினத்தின் பதவிகால முடிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதுடன் அவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |