வடக்கு மாகாணதில் துணை மருத்துவசேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார பிரிவுகளிலும் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையிலும், சுகாதாரபரி சோதகர்கள் பணிமனையிலும், அனைத்து குடும்ப சுகாதார சேவை அலுவலகங்களிலும் குறித்த பகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொடுப்பனவை அதிகரிக்கும் நோக்கில், இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் இன்று(10.01.2024) காலை 8.00 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர்கள்.
மேலும், இந்த நடவடிக்கை 12.01.2024 அன்று காலை 8.00 மணிக்கு முடிவடைவதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம்
மேலும், யாழில், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் தமக்கு 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தனர்.
இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், தாதியர்களின் சேவை உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
செய்தி - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



