கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2024ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(22.07.2024) கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
அணிவகுப்பு மரியாதை
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என்.ஜயபத்ம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸ் பிரிவு வாகனங்களின் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன், காலை முதல் மாலை வரை பொலிஸாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள், சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் என்பவற்றை பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என்.ஜயபத்ம பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில், சவளக்கடை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொலிஸாரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 19 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
