கொழும்பிலிருந்து கண்டிக்கும், கண்டியிலிருந்து விமானத்திலும் பறக்கும் தங்கக்குதிரை! சபையில் தகவல் (Video)
இலங்கையில் இருந்து 1800 கோடி டொலர் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில், உகண்டாவின் நிதி கையிருப்பு அதிகரித்துள்ள விடயத்தை ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிட்கொயின் தொடர்பில் நான் கூறியிருந்ததாக நாமல் கூறியிருந்தார். ஆனால் நான் எப்போது அப்படி கூறினேன் என்று அவரிடம் கேட்கிறேன்.
அதேபோன்று தங்கக் குதிரை தொடர்பில் கதைத்ததாகவும் ஆனால் அதனை நிரூபிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால் நான் உண்மையிலேயே தங்கத்தில் செய்யப்பட்ட குதிரை பற்றி கூறவில்லை.
கொழும்பில் இருந்து கண்டிக்கும் கண்டியில் இருந்து விமானத்திலும் பறக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படுகின்ற அளவிற்கு பெறுமதியான தங்கக் குதிரைகளா என்றே கூறியிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,