நாடாளுமன்றை கலைப்பது தொடர்பில் அமைச்சரின் பகிரங்க அறிவிப்பு (Video)
அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான சர்ச்சையின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்காலிகமாக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலைப்புக்கு இணங்கவே ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஜனநாயக ரீதியிலான நாடாளுமன்ற முறையை மீறி செயற்பட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம் தொகுப்பு,





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
