அரச நிறுவன பணியாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் (Video)
அரச நிறுவங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதன் ஊடகாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்றை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின் படி அரச நிறுவனங்களில் வளி சீராக்கிகளின் பாவனை கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மின்தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுக்களை உபயோகிக்க வேண்டும் என்பதுடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிரத்து சுகாதார வழிகாட்டலுக்கு ஏற்ப பயணிக்கக்கூடிய உச்ச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,



