அரச பாதுகாப்பில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர்! வெளியாகியுள்ள தகவல் (Video)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் இன்றும் உயிருடன் உள்ளதாகவும், அவர்கள் அரசாங்க பதவிகளில் அரச பாதுகாப்பில் இருப்பதாகவும் இலங்கையின் சிவில் செயற்பாட்டாளரும் அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்தேச அமைப்பின் இலங்கைக்கான தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இன்று உயிருடன் இருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தனிப்பட்ட குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுவதே மிகமுக்கிய வாக்குமூலமாக கருத வேண்டும்.
ஆகவே சரத் பொன்சேகா உண்மைகளை தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,