விரைவில் இலங்கை முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம்! பல துறைகள் முடங்கலாம்
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் அவற்றுடன் தொடர்புடைய பல துறைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து என்பவற்றிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படுவதால் தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் விரைவில் இலங்கை முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படுமோ என சமூக அவதானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
