நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு (VIDEO)
லங்கா சதொச விற்பனை நிறுவனத்திடமிருந்து 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை தற்போதைய சந்தை விலையை விட 1000 ரூபாய் குறைவாக வாங்க முடியுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) அறிவித்துள்ளார்.
சதொச நிறுவனத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1998இற்கு அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த 15 பொருட்களையும் நிவாரண விலைக்கு கொள்வனவு செய்ய முடியும் என இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிவாரணப் பொதி தொடர்பான அறிவிப்பானது மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவல் என சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,