ஒன்றரை வாரத்தின் பின் உண்மை நிலை: நாட்டை முடக்குவதை தவிர வழியில்லை என அறிவிப்பு
நாட்டில் தற்போது அதிகரிக்கும் கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு எங்களால் முடியாத பட்சத்தில் மீண்டும் நாட்டை முடக்குவதற்கு பரிந்துரைப்பதை தவிர வேறு வழியில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கோவிட் தொற்று பரவல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், கோவிட் தொற்றின் உண்மை நிலையை எதிர்வரும் ஒன்றரை வாரங்களுக்கு பின்னரே அறியக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,




