இலங்கை மீண்டும் முடக்கப்படுமா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவல்
பொது மக்களின் கவனக்குறைவான நடத்தைகளின் காரணமாக நாட்டில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena) தகவல் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பலர் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதுடன், அவர்களில் பலர் குறைந்தபட்சம் முகக்கவசத்தினை கூட அணியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களின் அலட்சியம் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மீண்டும் தேவையில்லாமல் நம்மை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறைந்தபட்சம் டிசம்பர் இறுதி வரை சுகாதார பழக்கவழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 41 நிமிடங்கள் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
