இலங்கைத் தமிழர்களின் தலைவிதிக்கு ஆபத்து - இந்திய புலனாய்வு அமைப்பின் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், இலங்கையில் சீன அரசாங்கத்தின் பாரிய அளவிலான நீண்ட கால முதலீடுகள் குறித்து கடுமையாக கவலையடைந்துள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மாநிலங்களுக்கான குறிப்பொன்றில் மத்திய முகவரமைப்பொன்று சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் மாநாடு பற்றி குறிப்பிட்டுள்ளதெனவும், இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் விடயத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இலங்கை மீதான செல்வாக்கை கூட அது இழந்துவிட்டதாகவும் பிரதிநிதிகள் கருதுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சீனர்கள் வட இலங்கையில் தங்கள் இருப்பை நிலைநாட்டினால் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி ஆபத்தில் இருக்கும் என்றும் இக்கூட்டத்தில் உறுதியாக நம்பப்பட்டதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam