நால்வரை விடுதலை செய்ய நிபந்தனை - அரச கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதலென எச்சரிக்கை
இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை குண்டு வைத்து வெடிக்க செய்யப் போவதாக மின்னஞ்சல் மூலமாக வெளிவந்த தகவல்கள் குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நான்கு பேரை விடுதலை செய்ய இந்த மின்னஞ்சலில் நிபந்தனை முன்வைக்கப்பட்ட அதேசமயம் அரச கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் விரைவில் தாக்குதல் நடத்தப்படுமென மின்னஞ்சலில் சொல்லப்பட்டிருந்தது என பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இது விமான நிலைய இணைய கட்டமைப்பை கையகப்படுத்தி பெருமளவு பணத்தை கப்பமாக பெற முயன்ற ஹேக்கர்களின் வேலையாக இருக்குமோ என்ற ஐயம் விசாரணையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,




