பொதுமக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழுக் கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நேற்று(15.07.2026) நடைபெற்றுள்ளது.
ஒன்றுகூடல்
கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தி தொடர்ச்சியான அதன் முன்னேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக மாவட்ட மட்டத்தில் இந்த உப குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த காணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உரிய அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி அஜிதா பிரதீபன், வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர்கள், மாவட்ட மட்ட காணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan