தியாக தீபம் திலீபனுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள்: அமைச்சரின் விளக்கம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(29.09.2025) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஒரு வார காலமாக திலீபன் நினைவேந்தல் நடைபெற்றது. அங்கு அனுஷ்டிப்பை செய்ய நாங்கள் சென்றபோது தடுக்கப்பட்டோம். அதன் பிறகு சில தினங்களுக்கு முன்னர் இறுதி நாள் நினைவேந்தல் நடந்து முடிந்தது.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
வன்முறை
அன்று யாரோ ஒருவர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாகவும் அவர் மீது தங்கள் வன்முறையை கஜேந்திரகுமார் எம்.பி அணி கையாண்டதாகவும் அதேபோன்று நியாயத்தன்மையை கேட்க சென்ற வேறு சிலருக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அந்த அளவுக்கு கீழ்த்தரமான வேலை எம்மிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



