அமெரிக்க சட்ட மா அதிபர் பாம் பாண்டியை பதவியிலிருந்து நீக்கினார் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் சட்ட மா அதிபரான பாம் பாண்டியை (Pam Bondi) அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்குப் பதிலாக தற்காலிக சட்ட மா அதிபராக டொட் பிளான்ச் (Todd Blanche) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பாம் பாண்டியை நீக்குவது குறித்து டிரம்ப் ஆலோசித்து வந்த நிலையில், புதன்கிழமை அன்று இருவருக்கும் இடையே நடந்த "கடுமையான" உரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாம் பாண்டி மீது டிரம்ப் பல காரணங்களால் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சர்ச்சைக்கரிய ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை பாம் பாண்டி உரிய முறையில் கையாளத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
குறிப்பாக, எப்ஸ்டீனின் வாடிக்கையாளர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் அவ்வாறான ஒரு பட்டியல் இல்லை எனத் துறை தரப்பில் கூறப்பட்டது டிரம்பிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் போதிய அளவில் விசாரணைகளை முன்னெடுக்கவோ அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடரவோ பாம் பாண்டி தவறிவிட்டார் என்று டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.
2016 தேர்தலில் ரஷ்யத் தலையீடு குறித்து தவறான தகவல்களை வழங்கியதாகக் கருதப்படும் முன்னாள் சிஐஏ இயக்குனர் ஜான் பிரென்னன் மீதான விசாரணையில் வேகம் காட்டவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாம் பாண்டிக்குப் பதிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் நிர்வாகி லீ செல்டினை (Lee Zeldin) நிரந்தர சட்ட மா அதிபராக நியமிக்க டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
அதேவேளையில், பாம் பாண்டிக்கு வருங்காலத்தில் நீதிபதி பதவி அல்லது வேறு ஏதேனும் ஒரு பணி வழங்கப்படலாம் என டிரம்ப் உறுதியளித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam