பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு VIP நுழைவாயில்! நீதிமன்றத்தில் சர்ச்சை
முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சென்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.
பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலே, பல்லேகம ஹேமரத்ன தேரர் மாத்திரம் எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அத்தோடு, நீதிபதியின் நுழைவாயில் ஊடாக செல்வதற்கு சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு யார் சிறப்புரிமை வழங்கியது என்பது தொடர்பில் விசாரிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam