பல்லேகம ஹேமரதன தேரர் நிரபராதி! சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிப்பு...
பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான பாரிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது என தான் நீதிமன்றத்தில் சாட்சியங்களுடன் ஒப்புவிப்பதாக குமார் என்ற சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தேரர் மற்றும் இலங்கை பொலிஸாருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பெருவாரியாக பரபரப்படும் அவதூறுகள் மற்றும் பொய்க் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்ப்பதற்காக நான் இது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி முடித்துள்ளேன்.
இந்தத் தருணத்தில் என்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நான் வழங்குவேன்.இது குறித்து புலனாய்வு ரீதியாக தேடி வருகிறேன்.
திரட்டப்பட்ட சாட்சியங்கள்
எங்களது பல்லேகம ஹேமரதன தேரருக்கும் ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அவதூறுகளை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது குறித்து புலனாய்வு ரீதியாக தேடிப் பார்க்க எனக்குத் தோன்றியது.
சமூக ஊடகங்கள் மூலம் மிக பிரம்மாண்டமான முறையில் பௌத்த மதத்தை சீரழிப்பதற்கான வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
அதனால்தான் எனக்கு இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று தோன்றியது. இது குறித்து நீங்கள் விமர்சிக்க விரும்பினால் தயவுசெய்து நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியாளராகுங்கள்.
தேரர் தவறானவர் என்பதற்கான அனைத்து சான்றுகளையும் நீங்கள் சமர்ப்பியுங்கள். அவர் இந்த குற்றத்தைச் செய்யவில்லை என்ற தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்க நானும் தயாராக இருக்கிறேன்.

இந்த இரு தரப்பினரும் கூறும் சாட்சியங்கள் இந்த வழக்குக்குத் தேவையா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.
அவ்வாறு இல்லாமல் மேலும் இந்த பௌத்த மதத்தை சீரழிக்க வேண்டாம். நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யூடியூபர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய சென்ற போது எங்களால் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்தனர்.பொலிஸாரும் யூடியூபர்களுக்கு எதிராக உங்களது முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறு இல்லை என்றனர். இலங்கை சட்டத்திட்டங்களில் அதற்கான இடமில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர் என்றார்.