பச்சிலைப்பள்ளியில் அமைந்துள்ள பளை மத்திய கல்லூரி வெள்ளத்தால் பாதிப்பு!
கிளிநொச்சியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பளை மத்திய கல்லூரி வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது.
பாடசாலை வளாகம் முழுவதுமாக வெள்ளம் நிறைந்துள்ளது. இப்பாடசாலையில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில், தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள சிரமப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலை வீதி என்பன வெள்ளம் நிறைந்து காணப்படுகிறது.இதனால் பாடசாலைக்குள் பிரவேசிப்பதும் வெளிச்செல்வதும் பாடசாலைக்குள் நடமாடுவதும் பெரும் சிரமப்படுகின்றனர்.
ஏ9 வீதியிலிருந்து பாடசாலை அமைந்துள்ள இடம் தாழ்வாகக் காணப்படுவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கின்றனர்.
>பாடசாலை வளாகத்திலிருந்த மரம் ஒன்றும் நீர்த்தேக்கம் அதிகரித்ததால் சரிவடைந்துள்ளது.பாடசாலையானது பளை நகரப்பகுதியில் உள்ளதால் வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களிலிருந்து வரும் கழிவு நீரும் கலந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கவும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
