திருகோணமலையில் பாற்குடப்பவனியும் சங்காபிசேக நிகழ்வும்
திருகோணமலை செல்வநாயகபுரம் அருள் மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் பாற்குடப்பவனியும் சங்காபிசேக நிகழ்வும் நேற்று (21) இடம்பெற்றது.
திருகோணமலை செல்வநாயகபுர உதயபுரி கிராமத்தில் மலை மீது அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள் மிகு முத்துக்குமாரசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இந்த நிகழ்வுகள் இடம் பெற்றன.
செல்வநாயகபுரம் அருள் மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்து 12 நாட்களாக மண்டலாபிசேக நிகழ்வு மற்றும் விசேட வசந்த மண்டப பூசைகளின் நிறைவாக இந்த சங்காபிஷேகம் நடைபெற்று இறுதியாக பாற்குடப்பவணி நடைபெற்றது.
பாற்குடப் பவணி
பாற்குடப் பவணியானது செல்வநாயகபுர விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி உதயபுரி முத்துக்குமாரசுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் பாலையூற்று, காந்திநகர், செல்வநாயகபுரம், தேவாநகர் பகுதிகளைச் சேர்ந்த அதிகளவான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







