விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகவில்லை: சிறிநேசன் (Video)

Batticaloa Gotabaya Rajapaksa Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kumar Feb 16, 2023 03:47 PM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மிகவும் ஒரு சூடு சொரணை உள்ள தலைவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சார செயற்பாடுகளில் ஓர் அங்கமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணிகள் இன்று (16.02.2023) மட்டக்களப்பு மாநகர சபை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி, மாமாங்கம் மற்றும் ஞானசூரியம் சதுக்கம் ஆகிய பகுதிகளில் துண்டுப் பிரசுர விநியோகம் இடம்பெற்றுள்ளது.


தேர்தலில் படுதோல்வி

இதன்போது மேலும் கருத்து தெரிவித்து அவர், கடந்த முறையைப் பார்க்கிலும் இந்த முறை அதிகளவான மக்கள் தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதற்கு ஆயத்தமாக உள்ளனர். அரசாங்கத்தை பொறுத்தவரையில் தேர்தலை வைப்பதற்கான மனநிலை அவர்களிடத்தில் இல்லை.

மொட்டுக் கட்சி மற்றும் யானை கட்சியினை எடுத்துக் கொண்டால் இந்த தேர்தலில் படுதோல்வியை அடைவார்கள் என்ற காரணத்தினால் இந்த தேர்தலை எவ்வாறு தள்ளி வைப்பதற்கு பார்க்கின்றார்கள்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மக்களின் கருத்துக்களை பெறுவதற்காகவும் மக்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகவில்லை: சிறிநேசன் (Video) | Palimentarian Srinasan About Current Political

சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திரதினம் கொண்டாடுகிறார்கள், நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் இருக்கின்றார்.

தேர்தலை அரசாங்கம் தள்ளிப்போடுகின்ற போது அரசாங்கத்தின் செல்வாக்கு குறையுமே தவிர கூடாது.

மூன்று தலைமுறைகளை இழந்துள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மிகவும் ஒரு சூடு சொரணை உள்ள தலைவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை.

யுத்த களத்தில் தனது மூன்று தலைமுறைகளை இழந்து இருக்கின்றார்.

பழ நெடுமாறன் அவர்கள் கூறியிருக்கின்றார், அவருடைய கருத்தை எடுத்தவுடன் நாங்கள் தட்டி விட முடியாது இருந்தாலும் இந்த கருத்தின் பின் அரசியல் இருக்கின்றதோ அல்லது புலனாய்வு விடயங்கள் இருக்கின்றதோ என்று சந்தேகத்தில் இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகவில்லை: சிறிநேசன் (Video) | Palimentarian Srinasan About Current Political

பழைய குருடி கதவை திறவடி என்று கூறுவார்கள் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்த நாட்டில் மிக மோசமான சிங்கள பௌத்த அடிப்படைவாதம் இந்த நாட்டை சீர்குலைத்து இருக்கின்றது.

பொருளாதாரத்தில் இன்று இந்த நாடு அதல பாதாளத்திற்குள் சென்றிருக்கின்றது இதற்கு காரணம் இனவாதம் மதவாதம்.

தமிழ் மக்களினுடைய பிரச்சினை 

தமிழ் மக்களினுடைய பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தினால் தொடர்ந்தும் இந்த நாடு இந்த பிரச்சினைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் நாட்டை காட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.

பௌத்த சிங்கள அடிப்படை வாதத்தை அரசியல்வாதிகள் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள். பண்டா செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிவதற்கும், டட்லி செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கும் கூட இவர்கள்தான் காரணமாக இருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகவில்லை: சிறிநேசன் (Video) | Palimentarian Srinasan About Current Political

உள்நாட்டுப் பொறிமுறையினால் அல்லது உள்நாட்டு அரசாங்கத்தினால் இனப்பிரச்சினையை தீர்க்கக் கூடிய வாய்ப்பு இலங்கையில் இல்லை சர்வதேச பொறிமுறை மூலமாக சர்வதேச மத்திய அரசின் மூலமாக இந்த நாட்டின் பிரச்சினையை தீர்க்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

எதுவும் உண்மையில்லை ஏமாற்றுகின்ற வித்தையாகவே காணப்படுகின்றது.

பௌத்தகுருமார்கள் மீது சட்டம் பாய்வதில்லை

ஜனாதிபதி கூறுகின்றார் பிரச்சினையை தீர்க்க போகின்றோம் என்று அடுத்த கட்டமாக பிக்குகள் ஏவி விடப்பட்டவர்கள் போன்று நாடாளுமன்றத்தில் 13-ஆம் திருத்த சட்டத்தை கொளுத்தி விடுகின்றார்கள்.

இந்த நாட்டில் பௌத்தகுருமார்கள் மீது சட்டம் பாய்வதில்லை எதை செய்தாலும் கௌரவமான அந்தஸ்துள்ள தலைவர்களாக மதிக்கப்படுகின்றார்கள்.

எனவே அந்த குழப்பகாரர்கள் இருக்கும் வரைக்கும் இந்த நாட்டில் சாந்தியோ சமாதானமும் அல்லது சர்வ மாதங்கள் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகாது.

ஜனாதிபதி அடுத்த முறையும் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக பொய்யான வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவற்றை தீர்ப்பதற்கான ஆளுமை சக்தி அவரிடம் இல்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகவில்லை: சிறிநேசன் (Video) | Palimentarian Srinasan About Current Political

மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல் மக்களிடம் வருமானம் வற்றிப் போய் கிடக்கின்றது. வருமானம் இல்லாத நிலையில் வரிகள் அதிகரித்து கொண்டிருக்கின்றது.

அரசியல் - பொருளியல் அறிவின்மை

அரசியல் அறிவில்லாமல் பொருளியல் அறிவில்லாமல் கோட்டாபய ராஜபக்ச  செல்வந்தர்கள் மீதான விதிக்கப்பட்ட வரிகளை விழக்கிவிட்டதன் காரணமாக அரசுக்கு 60,000 கோடி நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது.

சீனி இறக்குமதியில் தங்களுடைய நண்பர்களுக்கு சலுகைகள் கொடுத்ததனால் 1600 ரூபா கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தவொரு சந்தர்ப்பதிலும் விலை போகவில்லை: சிறிநேசன் (Video) | Palimentarian Srinasan About Current Political

இவ்வாறு வெங்காயம், சீனி, எண்ணெய் எல்லா இறக்குமதிகளிலும் தரகு பணம் அடிக்கின்ற செயற்பாடு அரசு செய்வதனால் முழு கடன் சுமையும் மக்களின் தலையில் பாய்ச்சப்படுகின்றது.

இதனால் மின்சார சபைக்குரிய வரிகளை அதிகரிப்பதன் மூலமாக மக்களை மீண்டும் வீதிக்கு இறங்கி மிக மோசமான போராட்டத்தில் ஈடுபடுவதற்குரிய வாய்ப்பை அளிக்கின்றார்கள் என கூறியுள்ளார்.

வட்டார வேட்பாளர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் வட்டார தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US