பலாலி ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாடுகளில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்பு
யாழ். (Jaffna) பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டுள்ளார்.
இப்பூஜை நிகழ்வுகள் நேற்று (04.12.2024) இடம்பெற்றுள்ளன.
பூஜை நிகழ்வுகள்
இதன்போது, வழிபாடுகளில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதேவேளை, ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |