தலைமறைவான இம்ரான் கான்! பரபரப்பாகும் பாகிஸ்தான் அரசியல் களம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அந்த நாட்டின் பொலிஸார் கைது செய்ய முயன்றதாகவும் எனினும் அவர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் வீட்டுக்கு பொலிஸார் சென்றபோதும் அவர் அங்கு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
முன்னதாக தேர்தல் ஆணையம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலான விசாரணையில் முன்னிலையாகாமை காரணமாகவே நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது உத்தரவைப் பிறப்பித்தது.
ஏற்கனவே கடந்த நவம்பரில் நடந்தப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு மற்றும் காலில் காயம் ஏற்பட்டதில் இருந்து இம்ரான் கான் பெரும்பாலும் லாகூரில் உள்ள அவரது வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்தநிலையில் குறித்த தாக்குதலின் பின்னணியில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்,
உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் நாட்டின் சக்திவாய்ந்த உளவு அமைப்பான
இன்டர்-சேர்வீசஸ் இன்டலிஜென்ஸின் பணிப்பாளர் ஆகியோர் செயற்பட்டதாக இம்ரான்
கான் குற்றம் சாட்டியுள்ளார்.
