தென்னாபிரிக்க அணிக்கு சவாலாகியுள்ள பாகிஸ்தானிய அணி
சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய நாளின் இறுதியில் பாகிஸ்தான் அணியை வெற்றி கொள்வதற்காக 148 ஓட்டங்களை பெறுவதற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 3 விக்கட்டுக்களை இழந்து 27 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்படி இன்னும் அந்த அணி வெற்றி;க்காக 121 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளது.
முதல் இன்னிங்ஸ்
முன்னதாக பாகிஸ்தானிய அணி தமது முதல் இன்னிங்ஸில் 211 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 237 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 301 ஓட்டங்களை பெற்றது
இந்தநிலையில் நாளையதினம் போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற நான்காம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |