பாகிஸ்தான் அணியிடம் இலங்கை படுதோல்வி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்துள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் சார்பில் மொஹமட் வசீம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கினை எட்டியது.
இதில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களயும் பகர் ஸமான் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் மைக்கல் வென்டர்சே மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன்படி பாகிஸ்தான் அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான சர்வதேச ஓருநாள் தொடரை வெள்ளையடிப்புச் செய்து வெற்றியீட்டியுள்ளது.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 37 நிமிடங்கள் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam