பாகிஸ்தானின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி
பாகிஸ்தானினின் தைமூர் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் பங்களாதேஷ் அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்துள்ளது.
சீனாவின் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே கராச்சி திரும்புகிறது.
முதல் பயணம்
ஷாங்காயில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல், கராச்சிக்கு தமது முதல் பயணத்தை மேற்கொள்கிறது.
கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் ஏவுகணைப் போர்க்கப்பலான PNS தைமூருக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 12-15 வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷில் அனுமதி மறுப்பு
இந்த நிலையில், ஆகஸ்ட் 7 தொடக்கம்10 வரை, இந்த கப்பல் பங்களாதேஷில், நங்கூரமிட கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவின் அரசாங்கம், இந்திய நரேந்திர மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாக உறவை கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 2028 ஆம் ஆண்டிற்குள் பாகிஸ்தானுக்காக எட்டு யுவான் வகை -041 டீசல்
தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை சீனா உருவாக்கி வருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
