இந்திய பிரதேசங்கள் மீது பாகிஸ்தானின் எறிகனைத் தாக்குதல்: 3 இந்தியர்கள் பலி
பாகிஸ்தானின் காஸ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதை அடுத்து, பாகிஸ்தான் இராணுவம், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் எறிகனைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில் 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதில் தாக்குதல்களை நடத்தியதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸ்மீரில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா போர் முனைப்பை மேற்கொண்டு வந்தது.
உறுதிப்படுத்திய பாகிஸ்தான் இராணுவம்
இந்தநிலையில், கடந்த 12 நாட்களாக ஜம்மு காஸ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வந்தது.
இதனையடுத்து, இன்று அதிகாலை, கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் உட்பட 9 இடங்களில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய இராணுவம் தாக்குதல்களை நடத்தியது.
இந்தியா தாக்குதலை நடத்தியிருப்பதை பாகிஸ்தான் இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 12 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
