பாகிஸ்தான் - கில்கிட் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு! இராணுவம் குவிப்பு
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கில்கிட்- பால்டிஸ்தான் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்ததை அடுத்து, அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஈரானிய தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கில்கிட் நகரின் முக்கியச் வீதிகளில் திரண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வன்முறையாக மாறிய போராட்டம்
இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியதில், அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பாதுகாப்புப் படையினர் கூட்டத்தைக் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாகாண அரசு கில்கிட் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளது.
இணையச்சேவைகள் துண்டிப்பு
இணையச் சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டு, நகரின் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் இதர முக்கிய நகரங்களிலும் பதற்றம் நிலவி வருவதால், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தூதரகங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
ஹார்முஸ் திறந்திருப்பதாக ட்ரம்ப்... முற்றுகை அமுலுக்கு வந்ததாக அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam