பாகிஸ்தானிய நாடாளுமன்றத்தினால் போல்ட் செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான்: புதிய பிரதமர் செரீப்(Video)
பாகிஸ்தானின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான சேக்பாஸ் செரிப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கபட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளையதினம் அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசாங்கம் கவிழ்ந்தது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.
பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி பறிக்கப்படவில்லை.
எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் பிரதமர் இம்ரான்கான் ஆவார்.
அத்துடன் எந்த ஒரு பாகிஸ்தானிய பிரதமரும் இதுவரை ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை.
இதேவேளை 69 வயதான இம்ரான்கான் வாக்கெடுப்பு நடைபெறும்போது கீழ் அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இம்ரான் கான் கிரிக்கட் போட்டிகளின் போது சிறப்பான பந்துவீச்சாளராக செயற்பட்டு பலரின் விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்
இன்று பாகிஸ்தான் அரசியல் விளையாட்டில் அவருடைய விக்கட் முதன் முதலாக வீழ்த்தப்பட்டுள்ளது.