பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முன்னணி கிரிக்கெட் அணிகள்
இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 5 அணிகள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது தங்களது அந்தஸ்தை சர்வதேச அளவில் எடுத்துக்காட்டுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட் தொடர் 2025யில் பாகிஸ்தான் நடைபெற உள்ளது.
இதற்கு ஆயத்தமாகும் வகையில் பல அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளன.
பாகிஸ்தானின் நிலை
இதன்படி, பங்களாதேஷ், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் பாகிஸ்தான் விளையாட உள்ள போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அட்டவணை அறிவிப்பு குறித்து PCB தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) கூறும்போது,
“தங்கள் 2024-25 உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் சீசனை இறுதி செய்வதும், அறிவிப்பதும் முக்கியம்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக, 5 முன்னணி கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் வருகைகள், அதைத் தொடர்ந்து அடுத்த 8 மாதங்களில் 7 நாடுகள் நிகழ்வில் பங்கேற்பது, சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் நிலை மற்றும் அந்தஸ்தை எடுத்துக் காட்டுகிறது.
இந்த அணிகள் மற்றும் வீரர்களின் பங்கேற்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். அவர்கள் எங்கள் துறைகளுக்கு மகத்தான திறமையையும், போட்டி உணர்வையும் கொண்டு வருவார்கள்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |