பாகிஸ்தானில் திடீர் குண்டு வெடிப்பு: 5 பொலிஸ் அதிகாரிகள் பலி
பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட திடீர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பஜார் மாவட்டத்தில் பாதுகாப்புக்காக சென்ற பொலிஸ் அதிகாரிகளை குறிவைத்தே இந்த தாக்கதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மர்ம நபர்கள் தாக்குதல்
பாகிஸ்தானின் பஜார் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்குவதற்காக இன்று காலை மருத்துவக்குழுக்கள் அங்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக குறித்த பொலிஸ் குழு சென்றுள்ளது.
இதற்கமைய பொலிஸ் குழு சென்ற வாகனத்தை குறிவைத்து மர்ம நபர்கள் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பில் 5 பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எனினும் குறித்த குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
