பொலிஸ் நிலைய புத்தகத்தின் முக்கிய பாகங்கள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணை
அம்பாந்தோட்டை - ஊறுபொக்க பொலிஸ் நிலையத்தில் பெண் போக்குரவத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் வசம் இருந்த புத்தகத்தின் பாகங்கள் காணாமல்போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் நேற்று (13.07.2023) போக்குவரத்து பிரிவின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் வசம் இருந்த தண்டப்பண விதிப்புக்கான புத்தகத்தின் பக்கங்களே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
காணாமல்போயுள்ளதாக கூறப்டும் குறித்த புத்தகத்தில் சுமார் 1 முதல் 50 வரையான பக்கங்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |