வடக்கை பொருளாதாரத்தில் வலுப்படுத்துவதே ஜனாதிபதியின் இலக்கு: பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
வடக்கை பொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவதே ஜனாதிபதியின் இலக்காக உள்ளதென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோரின் தலைமையில் நேற்று (27.06.2024) நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வடக்கு அபிவிருத்தி திட்டங்கள்
மேலும் உரையாற்றிய ஆளுநர்,
ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொழிலின்மை பிரச்சினைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்வு திட்டங்கள் தொடர்பிலும், வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மாகாணங்களை போல வடக்கையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாகாணமாக மாற்றுவதே ஜனாதிபதியின் ஆசை எனவும் ஆளுநர் கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு தேவையான அடிப்படை கட்டுமானங்களையும், வசதிகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
பொருளாதார வலயங்களை ஸ்தாபிப்பதோடு, பலாலி விமான நிலைய சேவைகளையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,இவ்வாறான திட்டங்கள் ஊடாக மாகாணத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/888ebce3-a034-4359-a7f1-88afd4d983de/24-667dbd7a52eb9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/481a7aed-a6f5-4b58-a711-d46016e575b3/24-667dbd7acdc33.webp)
![இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை... மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த திட்டம்](https://cdn.ibcstack.com/article/7914cecf-ffc6-4cab-9d4c-0f7180d1e2bc/24-667cf0995e1e7-sm.webp)
இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை... மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த திட்டம் News Lankasri
![திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ](https://cdn.ibcstack.com/article/cb1d03e5-116e-4928-8fae-0ade27b8851c/24-667ce580d148e-sm.webp)
திடீரென சபதம் போட்ட மீனா, அதற்கான வேலையை செய்த முத்து, என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
![பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள்](https://cdn.ibcstack.com/article/0454a836-3ca9-44d7-9570-72ad7ea8605f/24-667cfa9609969-sm.webp)