வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரிப்பு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதினால் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்கள் உட்பட வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
எமது வைத்தியசாலையில் சாதாரண நோயாளர்கள் மாத்திரம் பயன்படுத்திய ஒட்சிசன் தற்போது கொரோனா தொற்றாளர்களுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்த வண்ணமேயுள்ளது.
எனினும், எமது வைத்தியசாலையில் தற்போது தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் காணப்படுகின்றன.
இருப்பினும் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது சுகாதார நடைமுறைகளை இடைவிடாது பின்பற்றுவது தங்களையும் தமது மாவட்டத்தையும் பாதுகாப்பானதாக வைத்திருக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam