வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட உரிமையாளர்களுக்கு அனுமதி
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களை உரிமையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிலங்களை உரிமையாளர்கள் இன்று(11.04.2024) வல்லை - அராலி வீதியில் பலாலி தெற்கு இராணுவச் சோதனை சாவடி ஊடாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவச் சோதனையைச் சாவடி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வசாவிளான் மற்றும் பலாலி தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த நிலங்களே இன்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட 234 ஏக்கர் நிலங்களின் உரிமையாளர்கள் கிராமசேவகர்களிடம் பதிவை மேற்கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நிலங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
33 ஆண்டுகளின் பின்பு தமது நிலங்களைப் பார்வையிட வந்த மக்கள் இராணுவச் சோதனையைச் சாவடியில் அடையாள அட்டை சகிதம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளே நடந்து செல்ல மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தமது நிலங்களைப் பார்வையிட ஆவலாக காலை 8 மணிமுதல் காவல் இருந்த பலரில் முதியவர்கள் சிலர் 4 மைல் தூரம் நடந்து பயணிக்க முடியாது எனத் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam